கனடா நாட்டின் ராணுவ தளபதியாக வெய்ன் அயர் இருக்கிறார். இவர் விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் புதிய ராணுவ அதிகாரியாக வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதிய ராணுவ அதிகாரியாக ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ நியமித்துள்ளார். இந்நிலையில் கனடா நாட்டின் வரலாற்றில் பெண் ஒருவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இவர் தற்போது ஆயுதப்படைகளின் தொழில் சார் நடத்தை மற்றும் கலாச்சாரத்தின் தலைவராக இருக்கிறார். இவர் கடந்த 35 வருடங்களாக ராணுவத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கினார். இதன் மூலம் போர்படை பிரிவில் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும் இதைத்தொடர்ந்து தற்போது வரலாற்றில் முதல்முறையாக நியமிக்கப்பட்ட முதல் பெண் ராணுவ தளபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.