மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் 14 வயது பூர்த்தியானால் நேரடியாக பத்தாம் வகுப்பு படிக்கலாம். 10, 12 ஆம் வகுப்புகள் தவிர தேனி, காளான் வளர்ப்பு மற்றும் தையல் உள்ளிட்ட 101 வகையான சான்றிதழ் படிப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

10, 12 ஆம் வகுப்பு தேர்வை எந்த மொழியிலும் மாணவர்கள் எழுதலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28442237, 7358690742, 7200080134 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இ-மெயில் [email protected] ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்