போலி செய்திகளை பற்றிய ஐடி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முன் மத்திய அரசு பத்திரிக்கை துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. போலி செய்திகளை ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கும் வகையில் மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது வெளிப்படையான ஆலோசனைக்கு விடப்பட்டது.

இந்த நிலையில் ஊடகங்களுக்கான ஐடி விதிகள் மேம்படுத்தப்பட்டு இது பற்றிய விவரங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதற்கு இந்திய பத்திரிகையாளர்கள் குழு அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐடி விதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த புதிய சீர்திருத்தங்களில் முழுவதும் நீக்கும்படி அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டதாக தெரிவித்தது. மேலும் டிஜிட்டல் மீடியாவுக்கு ஒழுங்குமுறை விதிகளை வகுப்பதில் பத்திரிக்கை துறையினர், ஊடக அமைப்பினர் மற்றும் தொடர்புடைய பிற பங்குதாரர்களுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.