இன்னும் ஓரிரு மாதங்களில் கோடை காலம் தொடங்க இருப்பதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வீட்டில் குழந்தைகள் இருந்தால் மின்விசிறிகள் மற்றும் ஏசி மிக அதிகமாக பயன்படுத்தப்படும். இதனால் மின் கட்டணம் அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்தும் வகையில் மற்றும் மின்தடையின் போது சிக்கல் ஏற்பட்டாலும் தற்போது இதற்கு enjoy cool 1, 200 W 11-in-1 பவர் ஸ்டேஷன் என்ற புதிய கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது அதிக திறன் கொண்ட 1008 wh பேட்டரியை கொண்டுள்ளது.

இதற்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் மின் நிலையம் நாள் முழுவதும் பொருள்களை இயக்க முடியும். இதன் மூலமாக டிவி, ஏசி, ஸ்மார்ட் போன், ப்ரொஜெக்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை இயக்கலாம். அதே சமயம் பேட்டரி குறைவாக இருக்கும் போது sos சிக்னல் காண்பிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இதில் பேட்டரி மேலாண்மை அமைப்பு இருப்பதால் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மின்னழுத்தம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். 11 கிலோ எடையுடன் இது 56 ஆயிரத்து 120 ரூபாய்க்கு கிடைக்கின்றது. இது முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் விற்பனை வருகின்ற மார்ச் மாதத்தில் இந்தியாவில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.