
தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் சுஞ்சுபள்ளி (எம்) வித்யா நகர் சாலையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 13 வயது மாணவர் ஹரிகிருஷ்ணா என்பவர் படித்து வந்துள்ளார். இந்த மாணவர் பள்ளியில் இருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவனுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட சிறுவன் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.