அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகள் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் புகார்கள் மற்றும் சிசுக்கொலை தொடர்பான பகீர் தகவல்கள் உலக நாடுகளை உலுக்கியுள்ளன.

அதாவது சிறுமி மற்றும் இளம்பெண்களைக் கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஜெப்ரி எப்ஸ்டீன். பல செல்வாக்கு மிக்க நபர்கள் இவரது வாடிக்கையாளர்களாக இருந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவரது ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ தற்போது நீதிமன்ற உத்தரவின்படி பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய ஆவணங்களின்படி, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நியூஜெர்சியில் வைத்து 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்பை கடித்தபோது, அவர் அச்சிறுமியைத் தாக்கியதாகவும், அதே சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் வன்கொடுமை செய்ததாகவும் அந்த ஆவணங்களில் மிக விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல், 1984-ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில் நடந்த சம்பவமாகும். அங்கு பிறந்த குழந்தை ஒன்று கொல்லப்பட்டு ஏரியில் வீசப்பட்டதை டிரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அந்தக் குழந்தை, டிரம்ப் அல்லது அவருடன் தொடர்புடைய பிறரின் பாலியல் உறவினால் உருவான குழந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் அந்த ஆவணங்களில் எழுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்தப் புகார்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இவை தனது அரசியல் நற்பெயரைக் குலைக்கத் திட்டமிட்டுச் செய்யப்படுபவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்தடுத்து வெளியாகி வரும் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.