அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தா.பழூர் அருகிலுள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் வசித்து வரும் கலையரசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதலில் காட்டுமன்னார்குடியில் அமைந்திருக்கும் ஓமம்புளியூர் அரசு பள்ளியில் பணிக்கு சேர்ந்து, அங்கிருந்து மாறுதல் பெற்று சிலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

அதன்பின் மீண்டுமாக பணி மாறுதல் பெற்று காரைக்குறிச்சி உயர் நிலை பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார் கலையரசன். இப்பள்ளி தற்போது மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனிடையில் காரைக்குறிச்சி அரசு பள்ளியில் பணிபுரியும் கலையரசன் கடந்த 2014 ஆம் வருடம் முதல் இப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, காலையில் 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்து மாணவர்களை ஒழுங்குப்படுத்தி வகுப்பு தொடங்குவதற்கு முன்பே அவர்களுக்கு ஏதாவது பாடம் குறித்து கற்றுத்தருவது என்னுடைய வழக்கம் என்று கூறினார்.