ஹிமாச்சல பிரதேசம், நூர்பூரை சேர்ந்தவர் அக்ரித் பிரான் ஜஸ்வால். இவர் தனது 7ஆவது வயதில் தீவிபத்தில் பாதிகப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து ‘உலகின் இளம் அறுவை சிகிச்சை நிபுணர்’ என்ற புகழைப் பெற்றார். அக்ரித், ஐந்தவாது வயதில் ஆங்கில இலக்கியங்களை படித்து அனைவரையும் வியப்படைய வைத்தார்.

பின்னர் 12 வயதில் நாட்டின் “இளம் பல்கலைக்கழக மாணவர்” என்ற பெருமையை அடைந்தார். மேலும் உலக புகழ்பெற்ற “ஓபரா வின்ஃபிரே” வின் நிகழ்ச்சியில் பங்கேற்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது 17 வயதில் வேதியியலில் முதுகலை பட்டம் படித்துவருகிறார்.