பிரபல ஹாலிவுட் நடிகர் டேரன் கென்ட் (வயது 39) இன்று காலமானார். இவர் சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை அன்று காலமானார். இந்த விஷயத்தை குடும்பத்தினர் தாமதமாகவே தெரிவித்தனர். ஹாலிவுட் நடிகர் டேரன் கென்ட் இங்கிலாந்தின் எசெக்ஸில் உள்ள கென்டில் பிறந்தார். இவர் 2008 ஆம் ஆண்டு ‘மிரர்ஸ்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடர் அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது.