மகாராஷ்டிரா மாநிலத்தில் மதச் சடங்கு என்ற பெயரில் சுமார் 11,000 லிட்டர் பால் நர்மதா நதியில் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாதா ஜி பாபா என்பவரும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் இணைந்து, லாரிகளில் கொண்டு வரப்பட்ட பாலை நர்மதா நதியில் ஊற்றி ‘அபிஷேகம்’ செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.

​இந்தச் சம்பவத்தைப் பார்த்த சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “இவ்வளவு பெரிய அளவிலான பாலை வீணாக்குவதற்குப் பதிலாக, பசியால் வாடும் ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றும், “இது போன்ற செயல்களால் நதிநீர் கடுமையாக மாசுபடும்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். பக்தி என்ற பெயரில் உணவுப் பொருட்களை வீணடிக்கும் கலாச்சாரம் மாற வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.