
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட 18 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் சென்றனர். அங்குசாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் பச்சப்பாளி மேடு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்