
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் பயனடையும் விதமாக அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் மீன்பிடித் தொழிலில் ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு என ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2.07 லட்சம் மீனவர்களுக்கு அரசின் பங்களிப்பாக 62.19 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.