செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள்…  20 ஆம் தேதி கழக கொடியை ஏற்றுகிறபோது…  அம்மா பேரவையினுடைய ராணுவ வீரர்களுடைய அந்த மரியாதையை….  கொடி அணிவகுப்பு  மரியாதையை அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.  இந்த வரலாற்று வாய்ப்பினை கழக அம்மா பேரவைக்கும் – கழகத் தொண்டர்களுக்கும் – தொண்டர் படைக்கும் – பாசறை உள்ளிட்ட அனைத்து சார்பு பணிகளுக்கும் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தாய் உள்ளத்தோடு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

அதில் இன்றைக்கு நாம்  20ஆம் தேதிக்கான பயிற்சி கொடி அணி வகுப்பில்  நம்முடைய பேரவையினுடைய ராணுவ சிப்பாய்கள் அந்த பயிற்சியை காலையில் 7 மணியிலிருந்து எடுத்துக் கொண்டார்கள். அந்த பயிற்சி மிக நேர்த்தியாகவும் – சிறப்பாகவும் இருந்ததாக பல படைகளை வழிநடத்தி இருக்கின்ற அனுபவம் பெற்றுருக்கின்ற நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கர் அவர்கள் நமக்கு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

இந்த போர் படை சிப்பாய்கள், ராணுவ அணி வகுப்பு, கொடி அணிவகுப்பு காலையிலே கொடுத்தபின்பு… இவர்கள்  எல்லாம் நேரடியாக மாநாட்டு பந்தலுக்கு வரக்கூடிய கழக தொண்டர்களுக்கு வழிகாட்டுகின்ற வகையிலே… அவர்களுக்கு குடிநீர் வழங்குதல்,  அவர்களை இருக்கையிலே அமர வைத்தல், அவர்களை ஒழுங்குபடுத்தல், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை கொடுப்பது… இது போன்ற அந்த சேவைகளை கழகத்தினுடைய பணியாளராக முன்னிறுத்துவதற்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.

இதிலே நம்முடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் – அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர்கள் – அம்மா பேரவையின் மாநில நிர்வாகிகள் – இங்கே இருக்கக்கூடிய வெற்றிவேல் அவர்கள் –  இளங்கோவன் அவர்கள் – இங்கே இருக்கக்கூடிய தமிழரசன் அவர்கள் –  இங்கே இருக்கக்கூடிய  மாணிக்கம் அவர்கள்- டாக்டர் சரவணன் அவர்கள் –  எஸ்.எஸ் சரவணன் அவர்கள் – சதன் பிரபாகரன் அவர்கள் –  சேதுராமானுஜம் அவர்கள் – தம்பி ஆரி அவர்கள் – இப்போது எங்களை வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிற அண்ணன் முன்னாள் சபாநாயகர் ஐயா காளிமுத்து அவர்களுடைய சகோதரர் ரவிச்சந்திரன் அவர்கள் –  இங்கிருக்கக்கூடிய நம்முடைய பொறுப்பாளர்கள் எல்லோரும் பொறுப்பேற்று ஒவ்வொருவரும் 10, 10 குழுவாக…  10 பேர் கொண்ட குழுவாக அவர்களை தயார் செய்திருக்கிறார்கள்.

அதை இன்றைக்கு நாம் வெள்ளோட்டமாக நாம் பார்க்கிறபோது, அது புயல் ஓட்டமாக இங்கே அமைந்திருந்தது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகவே அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கொடியேற்றுகிறபோது மிக விரைவிலேயே சென்ட் சார்ஜ் கோட்டையிலே தேசிய கொடியை ஏற்றுவதற்கு இந்த மைதானத்திலே அண்ணன் அவர்கள் கழக கொடி ஏத்துகின்ற அந்த அணிவகுப்பு மரியாதை இங்கே நம்முடைய டாக்டர் விஜய் பாஸ்கர் அவர்கள் பயிற்சி வழங்கியிருக்கிறார்கள். அது எங்களுக்கு கிடைத்த ஒரு அரிய பெயராக  நாங்கள் நினைக்கின்றோம். ஆகவே இந்த பயிற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு,  20ஆம்  தேதி நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர் – வருங்கால முதலமைச்சர் அண்ணன்  எடப்பாடி அவர்கள்…  அவர்களுடைய எண்ணத்திற்கு ஏற்ப – நம்முடைய ராணுவ சிப்பாய்களாக – போர்படை,  தொண்டர் படை நம்முடைய வீரர்கள் அந்தப் பணியினை சிறப்பாக செய்வார்கள் என தெரிவித்தார்.