சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 % உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றம் செய்துள்ளது. கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.