விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.