தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி போன்ற 10 துறைகள் இருக்கிறது. இவற்றை நிர்வகிக்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கீழ் வருவார்கள். ஆசிரியர் பணியிலிருந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர்கள் பள்ளி கல்வி இயக்குனராக நியமிக்கப்படுவார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பள்ளிக்கல்வித்துறை ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார்.

தற்போது பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ் மனிதவள மேம்பாட்டு துறைக்கு மாற்றப்பட்டதால் மீண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதவி உருவாக்கப்படுமா என்ற கோரிக்கையும் எதிர்பார்ப்பும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் ஆசிரியர் பணியில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குனராக பதவி ஏற்பவருக்கு தான் அதில் அதிக அனுபவம் இருக்கும் என்பதால் மீண்டும் அதே பணியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.