தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான் மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தீபாவளி முடிந்த பிறகு பொது தேர்வு குறித்த அறிவிப்பை கட்டாயம் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டிய திருப்புதல் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. அதனால் டிசம்பர் மாதத்திற்குள் அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும். பொதுத்தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான் மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும் என்பதால் தீபாவளி முடிந்த பின்னர் பொது தேர்வு அட்டவணை குறித்து அறிவிப்பு கட்டாயம் வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.