தமிழகத்தில் நைலான் மற்றும் பிளாஸ்டிக் அல்லது செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூல் என்று அழைக்கப்படும் மங்கும் தன்மையற்ற காற்றாலை நூல் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த தமிழக அரசு முழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசு உத்தரவின்படி பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூல் காத்தாடி விடும் போது மனிதர்கள், விலங்குகள் மற்றும் குறிப்பாக பறவைகளுக்கும் கடுமையான காயங்கள் மற்றும் சில நேரங்களில் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.