தமிழகம் முழுவதும்  10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி அன்று வெளியாகின. மொத்தம் 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில்  8,35, 614 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இதில் மொத்தம் 78,706 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதனையடுத்து தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு மாணவர்கள் மே 23ஆம் தேதி முதல் விண்ணபித்து வருகின்றனர். முன்னதாக மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு துணைத்  தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  அத்வதஹு இந்த தேதி இன்று (மே 29) வரை நீட்டிக்கப்பட்டது. எனவே இன்றே கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும். அதோடு தத்கல் முறையில் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.