
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து வருவதுடன், அவர்களின் நலத்திட்டங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் தமிழக அரசின் இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்து பிரதமர் மோடி வைத்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடி 10 வருடம் என்ன செய்தார் என்பதை கூறுவதற்கு அவரிடம் சரக்கு இல்லை. செய்ததை சொல்ல அவரிடம் எதுவும் இல்லை. அதனால் திமுக அரசின் திட்டங்களை குறை கூறி அவர் வாக்குகளை சேகரிக்க நினைக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.