பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சவ வழியை சேர்ந்த பத்து வயது சிறுமி தான் அதிதி. இவரது வயது தான் 10 ஆனால் இவர் சுற்றிய நாடுகளின் எண்ணிக்கையோ 50. தனது மூன்று வயது முதல் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள துவங்கி இருந்தாலும் இவர் ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுத்தது கிடையாது என்பதே ஆச்சரிய தகவல்.

 

இதுகுறித்து அதிதியின் பெற்றோரான தீபக் அவிலாஷா தம்பதியினர் கூறுகையில் தங்கள் மகள் அதிதிக்கு அனைத்து நாடுகள் பற்றிய அனுபவம் வேண்டும் என்பதற்காக இத்தகைய திட்டத்தை செயல்படுத்தியதாகவும் இதற்காக வருடத்திற்கு 21 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் மகளின் கல்வியை கெடுத்து விடக் கூடாது என்பதற்காக பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மாலை சுற்று பயணத்தை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நடு இரவுக்குள் வீடு திரும்பி விடுவார்களாம். இதனால் அதிதி பள்ளிக்கு விடுமுறை எடுக்க வேண்டிய சூழல் உருவாகவில்லை என்று கூறியுள்ளனர்.