ஒரே நாடு ஒரே தேர்தலை 10 நாள்கள் இடைவெளியில் நடத்தி முடிக்கலாம் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அடுத்த 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம். இதற்கு அதிக மனிதவளம், உபகரணங்கள் தேவைப்படுவதால் 100 நாட்கள் அவகாசம் என அதில் கூறப்பட்டுள்ளது.