தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.
அப்போது மேடையில் பேசிய அவர், தொகுதிப் பங்கீடு மற்றும் இடங்கள் குறித்து எழும் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். “எனக்கு 10 சீட்டு கிடைத்திருந்தாலும் நான் யாரையும் திட்ட மாட்டேன், அதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை” என்று தெரிவித்த அவர், தன்னை நோக்கி எழும் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எனக்கு 10 சீட்டு கிடைச்சிருந்தாலும் நான் யாரையும் திட்ட மாட்டேன்..! அதற்காக நான் வரவில்லை.. கேள்வி கேட்காதீர்கள்.. நான் இங்கு இருக்க வேண்டியவன்.. அதனால் தான் வந்தேன்.. கமல் சொன்ன காரணம்..#Salem | #CMMKStalin | #DMK | #KamalHaasan | #Election2026 | #PolimerNews pic.twitter.com/3UNfRlRZJ7
— Polimer News (@polimernews) April 15, 2026
“>
தான் இங்கு இருக்க வேண்டியவன் என்பதால்தான் வந்திருப்பதாகவும், கொள்கைக்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கமல் பேசிய இந்த பேச்சு, கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
