உத்திர பிரதேசம் மாநிலம், மதுரா நகரில் தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நவம்பர் 2 ஆம் தேதி க்ளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. பின்னர், வாயு கசிவு சரிசெய்யப்பட்டது. ஆனால்,  நேற்று காலை மீண்டும் வாயு கசிந்ததால், 10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கேஸ் கசிவுக்கு முறையான நடவடிக்கை எடுக்காததே இந்த விபத்திற்கான காரணம் என்று மாணவிகள் குற்றம்சாட்டினர்.