தமிழகத்தில் கலந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட தற்போது வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டுக்கட்டை விளையாட்டு குறித்த பாடப்பகுதி இடம்பெற்றதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அதை நீக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் ஃப்ளையிங் கார்ட்ஸ் சம்ஸ் என்ற பிரிவில் சீட்டுக்கட்டு கணக்குகள் கடந்த கல்வியாண்டில் இடம் பெற்று இருந்தது. இந்தப் பகுதி தற்போது நீக்கப்பட்ட புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய பாடப் பகுதி அமலுக்கு வருகிறது.