
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து போய்டுச்சு… எங்க பாத்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதை பொருள், கஞ்சா விக்காத இடமே இல்லை. எது கிடைக்குதோ இல்லையோ கஞ்சா எளிதாக கிடைக்கிறது. இந்த ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது.
கள்ளச்சாராயம் பருகி பல பேர் இறந்துட்டாங்க. இன்றைக்கு போதை பொருள் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இளைஞர்களும், பொதுமக்களும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இந்த நாடே குட்டி சுவராகிட்டு. அப்பொழுது இருக்கின்ற பிஜேபி சைலேந்திரபாபு முதலில் சொன்னாரு 1. Oன்னு சொன்னாரு பிறகு,
2.Oன்னு சொன்னாரு பிறகு 3.Oன்னு சொன்னாரு பிறகு 4.O சொன்னாரு.. ஓ போடுறது தான் இந்த ஆட்சியினுடைய நிலைமை. வேற எதையும் தந்த பலன் இல்லை.. பிறகு ஓ போட்டுக்கிட்டே அவரு ரிட்டயர் ஆயிட்டாரு. போதைப்பொருள் ஒழிச்ச மாதிரி இல்ல. நான் டிவில பார்த்தேன்..
முதலமைச்சர் பேசுறாரு… போதைப் பொருளை கட்டுப்படுத்துவேன்னு சொல்றார. அப்போ ரெண்டு முக்கால் வருஷம் ஆட்சில தூங்கிட்டு இருந்தீங்களா ? என்ன பண்ணிட்டு இருந்தீங்க. நான் அடிக்கடி பேசிக்கிட்டே இருக்கேன்னு… 1.Oபோட்ட 2.O போட்ட 3.O போட்ட 4.O போட்ட… இப்போ முதலமைச்சரும் ஓ போட்டாரு என விமர்சனம் செய்தார்.