
டெக்ஸாஸில் ஒரு தனியார் இறுதி சடங்கு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் விண்கலம் மூலம் அஸ்தியை விண்வெளிக்கு கொண்டு சென்று மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். இந்த திட்டத்தின் கீழ் 166 பேரின் அஸ்தியை விண்வெளிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி அந்நிறுவனம் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அஸ்திகளுடன் அனுப்பியது. ஆனால் அது திட்டமிட்டபடி செல்லாமல் வானில் வெடித்து கடலில் விழுந்தது. இது குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஆனால் ஏவுகணையில் இருந்து பிரிந்து சென்ற விண்கலம் புவி வட்டப் பாதையில் செல்லும்போது தொலைத்தொடர்பை இழந்து அந்த விண்கலம் பசிபிக் கடலில் விழுந்தது. இதற்கான காரணம் என்ன என்பதை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
எங்களிடம் உறவினர்களின் அஸ்தியை கொடுத்து விண்வெளிக்கு கொண்டு செல்ல முன்வந்தவர்கலிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த தவறுக்கு நாங்கள் தான் முழு பொறுப்பு. அதனால் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தத் திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்று அந்நிறுவனத்தின் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.