நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. ராஸ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, சியாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்தடுத்து இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில்,  இன்று வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகிறது.

மாலை 5 மணிக்கு வெளியாகிய டிரெய்லரை ரசிகர்கள்   #VarisuTralier, #Vamshipaidipally, #Varisupongal2023, #VaaThalaivaa உள்ளிட்ட பல்வேறு ஹாஸ்டாக்குகளை ட்விட்டரில் ட்ரெண்டு செய்து கொண்டாடி வருகிறார்கள். விஜய் ரசிகர்கள்  ஹாஸ்டாக்குகள் அனைத்தும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருவதை உணர்ந்த அஜித் ரசிகர்கள்  (துணிவு ட்ரெய்லர்)  #ThunivuTralier  என்ற ஹாஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.