எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாக அமைந்துள்ளது துணிவு. பொங்கலுக்கு நேரடியாக மோதும் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களை பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் டிசம்பர் 31ஆம் துணிவு ட்ரைலர் வெளியானது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. முன்னதாக ஜனவரி 2-ம் தேதி ட்ரைலர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சில காரணகளால் வெளியாகவில்லை. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி உள்ளது.

முன்னதாக துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய 15 நிமிடத்தில் 11 லட்சம் பார்வையாளர்களை பெற்ற நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய 15 நிமிடத்தில் 16 லட்சம் பார்வையாளர்களை பெற்று விஜய் முன்னிலையில் இருக்கின்றார். இதனை ரசிகர்கள் #Varisutralier என்ற ஹேஷ்டாக்குடன் வைரலாகி வருகின்றார்கள். அஜித் படத்தின் துணிவு படத்தோடு ஒப்பிட்டு இப்போதே இருபடங்களுக்கும் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் ட்விட்டர் போரை ரசிகர்கள் தொடக்கி உள்ளனர்.