தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதேபோல் தல அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இரு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட நிலையில்,  ரசிகர்கள் அவர்களின் யுத்தத்தை ட்விட்டரில் தொடங்கியுள்ளனர். இதனிடையே இன்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி, அடுத்தடுத்த நிமிடங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

வாரிசு ட்ரெய்லர் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் #VarisuTralier, #Vamshipaidipally, #Varisupongal2023, #VaaThalaivaa போன்ற ஹாஸ்டாக்களை பதிவிட்டு டிரெண்ட செய்துவர,  மறுபுறம் #ThunivuTralier ஹேஷ்டேக்கில் அஜித் ரசிகர்கள் வாரிசு படத்தின் டிரைலரை கிண்டல் செய்து வருகின்றனர். வாரிசு பட டிரைலர் காட்சிகளை அஜித் ரசிகர்கள் பதிவிட்டு  ட்விட் செய்து வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர் ”என்னடா படம் எடுக்க சொன்னா சீரியல் எடுத்து வச்சிருக்கீங்க” என்று குறிப்பிட்டு, டைரக்டர் வம்சியை டேக் செய்துள்ளார். இது அஜித் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்படுகிறது.