தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவை ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர்  இன்று ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் மாலை 5 மணிக்கு வெளியான நிலையில் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூட்யூபில் சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை வாரிசு படக்குழு தங்களுடைய twitter பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.