நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இத்திரைப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் இரண்டாவதாக வெளியான காசேதான் கடவுளடா பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இதன்பின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் வெளியானது. இதனைத்தொடர்ந்து துணிவு படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படம் 2023 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகார்வப்பூர்வ தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பே திரைக்கு வருகிறது துணிவு படம். துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 11ஆம் தேதி துணிவு படம் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 2 படமும் ஒரே நாளில் வெளியாகும் என்று நினைத்த ரசிகர்களுக்கு சற்று இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. வாரிசு படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் ‘துணிவு’ படம் அதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியாக உள்ளது.