திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மணிப்பூர் நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க… தொடர்ந்து 5 மாதங்களா ? அதை பற்றி அனைவரும் பேசிட்டு இருக்கோம்.  மணிப்பூர் என்கிற மாநிலம் கடந்த ஐந்து மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் 250 பேர் இறந்துட்டாங்க.  தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தொலைக்காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. இன்டர்நெட் சேவை கிடையாது. இதுவரைக்கும் 250 பேர் கொலை செய்யப்பட்டு இருக்காங்க. தேவாலயங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு இருக்கின்றது.  அந்த மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பது யாரு ? பாஜக. இதற்கு பிரதமர் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம்…

ஒரு பிரதமர் பாராளுமன்றத்திற்கு வரதுக்கு போராட்டம் பண்ணனும்னா….  அது இப்ப இருக்கக்கூடிய இந்தியாவுடைய நிலைமை. பிரதமர் வந்து பேசுறார். பாராளுமன்றத்தில் இரண்டு மணி நேரம் பேசினார். அந்த இரண்டு மணி நேரத்துல…  ஒரு மணி நேரம் 50 நிமிஷம் நம்மள பத்தி தான், திமுக பத்தி தான்..  கழக அரசை பத்தி தான். அஞ்சு நிமிஷம் மட்டும் தான் மணிபூர பத்தி பேசி இருக்காரு. நம்முடைய தலைவர் ஒரு அழைப்பு விடுத்தார். உங்களுக்கு தெரியும்…  மணிப்பூர் மாநிலத்தில் விளையாட்டு வீரர்கள் அதிகம். இங்க இருந்து ஒரு அழைப்பு விட்டார்…

விளையாட்டு வீரர்களே…. உங்களுக்கு அங்கே பயிற்சி செய்ய சரியான நிலைமை இல்லை.. தயவு செய்து தமிழ்நாட்டுக்கு வாங்க. நான் உங்களை பார்த்துக்கிறேன்.  அப்படின்னு சொன்னார். கிட்டத்தட்ட 20 வால் வீச்சு வீரர்கள்… கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்து…  இங்கு சந்தோசமா தாங்கி,  தமிழ்நாட்டுல பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க…  வாழ்திக் கொண்டிருக்கிறார்கள்.  இதுதான் திராவிட மாடல் அரசுக்கும், சனாதன பாஜக அரசுக்குமான வித்தியாசம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.