நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குறிப்புகளை தந்து சர்ச்சையில் சிக்கியவர் மருத்துவர் சர்மிகா. மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் சித்தமருத்துவரான சர்மிகா youtube இல் கொடுத்து வந்த சில அறிவுரைகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. அவர் கூறிய இந்த அறிவுரைகளுக்கு பலரும் பதிலடி கொடுத்து வந்தார்கள்.

இந்த நிலையில் இது போன்ற போலியான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் கூறியிருந்தார். இதனை அடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தலைப்பில் டாக்டர் சார்மிக்காக தன்னுடைய youtube பக்கத்தில் விளக்கம் ஒன்று அளித்துள்ளார். “ஒரு குலோப் ஜாமும் சாபிட்டால் 3 கிலோ எடை கூடும்னு ஒரு ப்ளோல சொல்லிட்டேன். 1008 பிரச்சனை இருக்கு அப்டினா 1008 பிரச்சன இருக்குனா அர்த்தம். அதுபோலதான். இனிப்பு சாப்பிட்டா எடை அதிகரிக்கும். அதைத்தான் அப்படி சொன்னேன்.  நானும் மனுஷிதானே, தவறுகள் நடக்கத்தான் செய்யும். இதற்காக என்னை மன்னிச்சுருங்க” என்று கூறியுள்ளார்.

https://youtu.be/628sZe5YNB4