
கேரள அரசின் ஓணம் லாட்டரி குலுக்கலில் கோவை அன்னூரைச் சேர்ந்த கோகுல் நடராஜ் என்பவருக்கு ரூ.25 கோடி பரிசாக கிடைத்துள்ளது. நடராஜன் 5000ரூபாய் கொடுத்து 10 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளார். இந்த நிலையில், அவருக்கு அதிர்ஷ்டவசமாக முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. இருப்பினும் வரிப்பிடித்தம் போக சுமார் ரூ.17 கோடி அவருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனிஆயடுத்து இரண்டாம் பரிசாக வெற்றி பெற்ற 20 பேருக்கு தலா ரூ.1 கோடி ரூபாயும் மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தத்தக்கது.