ட்விட்டருக்கு போட்டியாக ‘த்ரெட்ஸ்’ என்ற புதிய செயலியை கடந்த புதன்கிழமை மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்தார். இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரொஃபைலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.  அறிமுகமான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பயனர்களை பெற்று அமோக வரவேற்பு பெற்றது.

இதற்குமுன் சேட்ஜிபிடி 5 நாட்களில் 1 மில்லியன் பயனர்களை கடந்திருந்த நிலையில், அந்த சாதனையை த்ரெட்ஸ் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம் 2.5 மாதங்கள், ஸ்பாட்டிஃபை 5 மாதங்கள், ஃபேஸ்புக் 10 மாதங்களில் 1 மில்லியன் பயனர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டெனால்ட்சன் ‘த்ரெட்ஸ்’ செயலியில் 10 லட்சம் Followers-களை கடந்த முதல் நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.