நடிகை விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன் போன்ற நட்சத்திரக் கூட்டமே நடிக்கின்றனர். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் படமானது வரும் அக்டோபர் 19 ல் வெளியாக உள்ளது. இவருடைய படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவருடைய பிறந்த நாளான ஜூன் 22 இல் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. சில சர்ச்சைகளை எதிர்கொண்டாலும், இரண்டுமே பயங்கர ட்ரெண்டிங் ஆனது.

இந்நிலையில் படப்பிடிப்பு கூட துவங்காமல் இருக்கும் தளபதி 68 திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. அதுவும் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் விற்காத அதிகபட்ச விலைக்கு தளபதி 68 படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூ. 26 கோடிக்கு விற்கப்பட்டது. விஜய் – யுவன் காம்போவில் கண்டிப்பாக படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.