2023ம் வருடத்தில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இத்திட்டங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் ஒரு வருட காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அடிக்கடி நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கவலையில்லை. மேலும் இத்திட்டங்கள் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா பலன்கள் மற்றும் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. தற்போது ஜியோ வழங்கும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி நாம் காண்போம்.

ரூபாய்.2545 திட்டம்

தினமும் 1.5GP டேட்டாவுடன் மொத்தம் 504 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் இத்திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இவற்றில் அன்லிமிடெட் அழைப்புகள், நாளொன்றுக்கு 100 SMS, கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய பயன்பாடுகளுக்கான சந்தாக்களையும் வழங்குகிறது.

ரூபாய்.2879 திட்டம்

தினமும் 2GP டேட்டா உடன் மொத்தம் 730ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இவற்றில் உங்களுக்கு அன்லிமிடெட் கால், நாளொன்றுக்கு 100 SMS மற்றும் ஜியோ ஆப்ஸ் நன்மைகள் கிடைக்கும்.

ரூபாய்.2999 திட்டம்

தினசரி 2.5GP டேட்டாவுடன் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமானது 365 நாட்கள், +23 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இத்திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு, நாளொன்றுக்கு 100 SMS மற்றும் ஜியோ ஆப் நன்மைகள் கிடைக்கும்.