தமிழில் ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் நடித்தவர்  சதா. தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து இவர் பிரபலமான நடிகை சதாவுக்கு இப்போது படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. கடைசியாக டார்ச் லைட் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பட வாய்ப்பு இல்லாததால் மும்பையில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில், இடத்தின் உரிமையாளர் திடீரென கெடுபிடி செய்ததால் ஓட்டலை காலி செய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்த மாதத்தோடு ஓட்டலை மூடுவதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார் சதா. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ஹோட்டலை மூடுவதை விட வேறு இடத்திற்கு மாற்றலாமே என்று அட்வைஸ் கூறி வருகிறார்கள்.