பொது இடங்களில், குறிப்பாக உணவகங்களில் சாப்பிடும்போது நமது உடைமைகளின் மீது எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளியில், ஒரு பெண் உணவகத்தில் நிதானமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தனது கைப்பையை (Bag) தான் அமர்ந்திருக்கும் நாற்காலியின் பின்புறம் தொங்கவிட்டிருந்தார். அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு பெண், இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
The type of people I hate pic.twitter.com/k2NY3GENQM
— Wild content (@Nocapmedia) January 13, 2026
உணவு சாப்பிடும் பெண் கவனிக்காத நேரத்தைப் பார்த்து, நாற்காலியில் இருந்த பையை மிக நைசாக உருவி, தனது பைக்குள் மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து சத்தமில்லாமல் நழுவுகிறார். ஒரு பெண் என்றும் பாராமல் சக பெண்ணின் உடைமையை இப்படித் திருடியது அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள், “இனிமேல் ஹோட்டலுக்குப் போனால் பேக்கை மடியில் தான் வைத்துக்கொள்ள வேண்டும் போல” என்று அதிர்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
