தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய், சமீபகாலமாக அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய அவர், தற்போது கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ட தல’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

சித்தி இதானி, தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகளின் போது பேசிய அருண் விஜய்யிடம், “ஹீரோ மற்றும் வில்லன் என மாறி மாறி நடிக்கிறீர்கள், இதில் எதன் மூலம் மக்களுக்குக் கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்?” எனத் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “திரையில் ஹீரோ அல்லது வில்லன் என்று பிரித்துப் பார்ப்பதில்லை; நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியம், கதாபாத்திரத்தின் தன்மை எதுவாக இருந்தாலும் அதன் மூலம் சொல்லப்படும் கருத்தை மக்கள் சரியாகப் புரிந்துகொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார். சமூகம் மற்றும் சினிமா குறித்த அவரது இந்த முதிர்ச்சியானப் பேச்சு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.