ஐபிஎல் 18 வது சீசனில் ஐந்தாவது போட்டியானது குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. இதன் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் எடுத்தது. கடைசியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 232 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக பஞ்சாப் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது.
இதனிடையே ஆட்டத்தின் 11வது ஓவரில் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் கோல்டன் டக் அவுட் ஆனார். இதன் மூலமாக ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் (19) ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை வீரர் ரோகித் சர்மா(18), ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்(18) ஆகியோர் உள்ளார்கள்.
