இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வடமாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை தமிழகத்தையும் தாக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூர் அருகே உயிரிழந்த பள்ளி நண்பனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பிளஸ் 2 மாணவன் சக்தி, வெயில் தாக்கம் காரணமாக மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.