இஸ்லாமிய மரபுப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது வழக்கம். இந்நிலையில் இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணியாவிட்டால் அந்த பெண்களை தண்டிக்கவும், அதை ஆதரிப்பவர்களை தண்டிக்கவும் ஈரான் நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு சேவை செய்யும் வணிகங்களுக்கும் சட்டம் பொருந்தும். இந்த மசோதா அரசியலமைப்பின் பாதுகாவலர்களாக செயல்படும் ஒரு மதகுரு அமைப்பான கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்கு உட்பட்டது.