ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் பழிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வரை பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஹரியானா மாநிலம் உட்பட வட இந்திய மாநிலங்களில் வரும் வாரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவும் என தெரிவித்துள்ளது. அதனால் தற்போது மாணவர்களின் நலன் கருதி ஹரியானா பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிப்பு செய்வதற்காக அறிவித்துள்ளது. அந்த வகையில் வருகிற ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.