நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான indigo விமான நிறுவனத்தில் இன்று மேம்படுத்துதல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அந்த நிறுவனத்தின் இணையதளம், செயலிகள் மற்றும் கால் சென்டர் சேவைகள் சுமார் ஆறு மணி நேரம் பாதிக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் 300 விமானங்களை கொண்ட இண்டிகோ நிறுவனம் 102 உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களை இணைக்கும் 1600-க்கும் மேற்பட்ட விமானங்களை தினமும் இயங்குகிறது.

இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, எங்கள் அமைப்புகள் ஜனவரி 14, 2023 அன்று மேம்படுத்தப்படுகிறது. அதனால் எங்களது வலைத்தளம் செயலி மற்றும் கால் சென்டரை 00.30 மணி முதல் 6.30 மணி வரை பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த ஆலோசனையும் இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.