அக்டோபர் மாதம் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் ஏராளமானவரை கொன்று குவித்ததோடு பெண்களுக்கு அநீதிகளை ஏற்படுத்தினர். அதன் பிறகு இஸ்ரேலுக்கும் ஹமாஸ்க்கு இடையே போர் தொடங்கி இன்று வரை நீடித்து வருகிறது.

இதனிடையே இஸ்ரேலுக்குள் மீண்டும் ஹமாஸ் அமைப்பினர் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளலாம் என்ற அச்சம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள பெண்கள் வெளியில் செல்லும்போதும் பணியிடங்களுக்கு செல்லும்போதும் ஆயுதங்களை கொண்டு செல்ல துவங்கியுள்ளனர்.

அப்படி இஸ்ரேல் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் தொகுப்பாளினியான லிட்டல் ஷேமேஷும் துப்பாக்கியுடன் தான் பணிக்கு செல்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை நேரலை ஒன்றில் லிட்டல் தோன்றிய போது அவரது இடுப்பில் துப்பாக்கி வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.