ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 19 ஆண்டுகளில் எந்தவொரு அணியும் செய்யாத பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது.

ஐபிஎல் 2026 சீசனில் ஆரம்பம் முதலே அசுர பலத்துடன் திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணி, தான் விளையாடிய முதல் 6 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத  முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஜாம்பவான் அணிகள் தொடர் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், 19 வருஷத்தில் ஒரு சீசனின் முதல் 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவாமல் பயணத்தைத் தொடங்குவது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

தொடர்ச்சியான இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் 11 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது. இந்த சீசனில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சரிசமமாக கைகொடுத்து வருகின்றன.

பேட்டிங் பொறுத்தவரையில்  தொடக்க வீரர்கள் அதிரடியான அடித்தளம் அமைப்பதும், மிடில் ஆர்டர் வீரர்கள் நிலைத்து நின்று விளையாடுவதும் அணிக்கு பெரும் பலமாக உள்ளது. பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக ‘டெத் ஓவர்களில்’ ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் இந்த சீசனில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.

பஞ்சாப் அணியின் இந்த அசுர வேகத்தைப் பார்க்கும்போது, இந்த முறை அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மட்டுமின்றி, முதல்முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.