அடுத்த முறை சந்திக்கும்போது உங்களை என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்” என்று சஞ்சு சாம்சன் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் ஷிம்ரோன் ஹெட் மையரை கேலி செய்தார்.

ஐபிஎல் 2023-ஐ வெல்லும்  முனைப்பில் இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். 2008-ல் பட்டம் வென்று கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிங்க் வாரியர்ஸ் இந்த முறை ஐபிஎல் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடந்த சீசனில் ராஜஸ்தானை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதேபோல இந்த முறையும் அவ்வாறே செய்து அணிக்கு மகுடம் சூட்டுவார் என்றும் நிர்வாகம் நம்புகிறது. களத்தில் வீரரின் கேப்டன்சி மட்டுமல்ல, களத்திற்கு வெளியே சக வீரர்களுடன் சஞ்சு பராமரிக்கும் பிணைப்பும் அணியை வலுவாக்குகிறது.

ராஜஸ்தான் அணியில் சஞ்சுவின் விருப்பமான வீரர்களில் ஒருவர் மேற்கிந்தியத் தீவுகளின் பவர்ஹவுஸ் ஷிம்ரோன் ஹெட்மையர். இருவரும் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நிலையில் இருவரின் கூட்டணியை சமூக ஊடகங்கள் தற்போது கொண்டாடி வருகின்றன. அதாவது சஞ்சுவின் படம் குறித்த ஹெட்மேயரின் கருத்தையும் அதற்கு சஞ்சுவின் பதிலையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் கருப்பு ஜாக்கெட் அணிந்து தனது ஸ்போர்ட்ஸ் பைக்கின் அருகில் நிற்கும் படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ஹெட்மேயர், இன்ஸ்டாவில் ‘உனக்கு ஒரு மோசமான தோற்றம் இல்லை சஞ்சுசாம்சன்… நம்பிக்கையுடன் அந்த இயந்திரத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை.’ என்று கிண்டலாக கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சஞ்சு, ஹஹஹ ஹெட்டி… தனக்கு அதெல்லாம் தெரியும் என்றும், நேரில் பார்க்கும் போது என்ன செய்வது என்று தெரியும் என்று எனக்குத் தெரியும் என்று பதிலளித்துள்ளார். இந்த கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.