ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு கேட்க வந்தால், பாக்கி 4,000 கேட்டு வாங்குங்கள் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்புடன் 5,000 கொடுத்தால் என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தற்போது, முதல்வர் ஆகிவிட்டார் 25,000 கொடுக்க வேண்டியதுதானே? 1,000 தான் கொடுத்திருக்கிறார் என்று சாடினார்.